சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

என்னிதயத்தை மீட்க…

தினமும்
அந்தி சாயும் வேளையில்
கைகளில் எதோ ஒரு
இசைக்கருவியை வைத்து
இசை பழகி கொண்டிப்பது
உன் வழக்கம்…

வானம் மெல்ல கறுத்துக் கொண்டு வர
உன் பாடத்தை நிறுத்திக் கொள்ள
எத்தனிப்பாய்
இதுவும் உன் வழக்கம்…

மரமோரம் சாய்ந்து நின்று
உன்னையும் உன் இசையும்
ரசிக்கும் என்னை
பார்த்ததும் பார்க்காமல்
போகுவதும் உன் வழக்கம்…

இப்பொழுதெல்லாம்
உன்னை நிறுத்தி
ஒன்று கேட்க
தோணுது எனக்கு…

இசையை
நீ என்னவோ மீட்க கற்று விட்டாய்
சேர்ந்து எனக்கும் கற்று கொடென்…
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை மீட்க…

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!