சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!





என் காதல்!

சிறகு முளைத்த
சின்ன பறவை
என் காதல்!

பறக்க துடித்தாலும்
நிதானமாய்
தயங்கி நிற்கிறது
அது!

கீழே விழுந்து
விடுவோமா
என்ற பயம்
ஒரு புறம்!

உயரத்தை
உணர்ந்த கலக்கம்
ஒரு புறம்!

எது எப்படியாயினும்
அதன் சிறகுகளை
முடுக்கி விட
வேண்டும்!

துளிர்க்கும் நட்பு!

துளிர் விட்டிருக்கும்
இளம் இலையை
தொட்டு பார்க்கும்
ஆவலில்
பிஞ்சு விரல்களை
நீட்டுகிறாள் அவள்!

எங்கே
அவள் கிள்ளி விட
போகிறாள்
என்ற பயத்தில்
அவள் அன்னையிடமிருந்து
புறப்பட்டது,
கனல் சொற்கள்!

கண்களில்
நீர் எட்டி பார்க்க
சின்ன தேம்பலுடன்
உள் நுழைத்து விட்டாள்
அந்த சின்ன பெண்!

அரை நொடி தாண்டி
அவள் வெளியே வருகையில்
சின்ன செடியுடன்
ஒரு சிறுவன்!

“இதை தொட்டுப் பார்,
நான் ஏச மாட்டேன்”
என அவன் சொல்லி
அதை நீட்ட,
அந்த இருவரும்
சேர்ந்து சிரிக்க…

ஒர் இளம்,
அழகிய
உறவு,
துளிர் விட
தொடங்கிறது!

என் காதல்!

பனி இரவை
காம்பு நுனியில் நின்று
தவம் செய்யும்
பவள மல்லியாய்
என் காதல்!

நீ
வந்தால் மட்டுமே
தரையில் விழுந்து
உயிர்ப்பிக்கும் அது!

காதல் கனல்!

எனக்கு பிடித்த பூ எது
என நீ கேட்கிறாய்…
நேர்மையெனும் பூவை
எனக்கு பரிசளி!
நம் காதல் செழித்து வளரும்!
*
உனக்காக
உயிரை கூட விடுவேன்
என
நீ பேசும் காதல் மொழி
ஒரு புறமிருக்கட்டும்!

முதலில்,
உன் உயிரை
புகையாய் கரைத்திடும்
வெண் சுருட்டை விடு!
*
என்னை
நிலைகெட
செய்யும்
ஒரே மாது
நீதான்
என குற்றம்
சாட்டுகிறாய்!
எப்போது,
உணர போகிறாய்?
உன் நிலையழியே
அந்த மது தான்
என!

என்னிதயத்தை மீட்க…

தினமும்
அந்தி சாயும் வேளையில்
கைகளில் எதோ ஒரு
இசைக்கருவியை வைத்து
இசை பழகி கொண்டிப்பது
உன் வழக்கம்…

வானம் மெல்ல கறுத்துக் கொண்டு வர
உன் பாடத்தை நிறுத்திக் கொள்ள
எத்தனிப்பாய்
இதுவும் உன் வழக்கம்…

மரமோரம் சாய்ந்து நின்று
உன்னையும் உன் இசையும்
ரசிக்கும் என்னை
பார்த்ததும் பார்க்காமல்
போகுவதும் உன் வழக்கம்…

இப்பொழுதெல்லாம்
உன்னை நிறுத்தி
ஒன்று கேட்க
தோணுது எனக்கு…

இசையை
நீ என்னவோ மீட்க கற்று விட்டாய்
சேர்ந்து எனக்கும் கற்று கொடென்…
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை மீட்க…

காதலே…

காந்தம் கைவாசம்
வைத்திருக்கிறாயா?
அப்பாப்பா…
எத்தனை மனிதர்கள்
உன் வசம்!
*
நீ
நீர் ஊற்றி அல்ல…
உயிர் ஊற்றி!
*
உன்னை
மோசமாக
கிறுக்கினாலும்
எப்பொழுதும்
போல
அழகாய்
தெரிகிறாயே
எப்படி?
*
சூரியனை மட்டும்
விழி வாங்கும் சூரிய கந்திகள்
இன்று உன்னை பார்க்கின்றன !
அது சரி…
மற்றங்களை ஏற்படுத்துவதே
உன் கலையாயிற்றே!
*
உலகில் உள்ள
மொத்த மலர்களையெல்லாம்
விலைக்கு வாங்கி விட்டயா?
உன்னை சொல்லிட
எப்போதும் இவைகளையே
தூதுக்கு அனுப்புகிறாயே?
*
கொஞ்சம் கொஞ்சமாய்
கருகும் குச்சியில்
தீயில்லை…
இருந்தாலும்
சுடர் விடுகிறதே
தீக்குச்சி !
இதுவும்
உன் வேலையோ?
*

அம்மாவுக்காக ஒரு வாழ்த்து!



மகிழ்ச்சியில் நான் குதித்தாடும்
பொழுதெல்லாம் என்னோடு
சேர்ந்து கொள்ளும்
உன் குதுகாலம்!

முகம் வாடிம்
பொழுதெல்லாம்
என்னமா என
கேட்கும்
உன் கரிசனம்!

தவறுகளை
சுட்டி காட்டி
என்னை செம்மைப் படுத்தும்
உன் அறிவுரைகள்!

சோர்ந்து போகும்
நேரங்களில்
ஊன்றுக்கோலாய்
நீ தரும்
ஊற்சாகம்!

சிறுங்காயமனாலும் சரி
பெருங்கீறலனாலும் சரி
பட்டென பதறும்
உன் தாய்மை!

அடிக்கடி
கிண்டல் செய்து
வம்பு இழுக்கும்
என்னை
புன்னகையுடன் பார்க்கும்
உன் அன்பு!

மழையில் நீ நனைந்தாலும்
சிறுத்துளிக்கூட என்மேல்
படாமல் வீடு சேர்க்கும்
உன் பரிவு!

இப்படி
எதைச் சொல்லி,
எதை நான் விட?

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!

நான் வாழும் வரை,
உன்னையும் வாழ வைப்பேன்…
நீடுழி வாழ வாழ்த்துகிறேன், என் அன்புத் தோழியே…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,அம்மா…!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)

தொலைக்க விடாமல் மனம்...




வீசும் தென்றல்
மெல்ல என் இதயகதவுகளை
திறந்து வைத்தது...

அங்கே
நான் பூட்டி வைத்திருந்த
காதலை
அதனுடன் கொண்டு
சென்றது...

பெயும் மழையில்
என் காதலும்
சேர்ந்தே நனைகின்றது...

சுழல் காற்றிடையே
என் காதல்
சிக்கிக் கொண்டு
தவிக்கின்றது...

என் மனமோ
பட படக்கின்றது...
எங்கே
அது தொலைந்து
விடுமோ என...

தொலைக்க
நினைக்கிறேன் நான்...
தொலைக்க
விடாமல் மனம்...


என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!