சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

நிலா



தீ பிழம்பிலிருந்து
கொஞ்சம் தீ வாங்கி
இருண்டிரும் பிரபஞ்சத்தை
விளக்கேற்றி வைக்கிறாய்!

கண்ணிருந்தும் இருட்டில்
குருடர்களாகி போகும்
மனிதருக்கு ஒளியாகி
வழிக்காட்டுகிறாய்!

தனிந்த பொழுதுக்கு
உயிர் ஊட்டி கவிதையெழுதும்
கவி பெருமக்களின் கவிப்பொருளாய்
உருமாறுகிறாய்!

நேசங்களைப் பிரிந்து
துயிரும் நெஞ்சங்களை
அரவணைத்து, புத்துயிர்
தந்து துயில் கொள்ள செய்கிறாய்!

வெண்முகம் காட்டி,
இயற்கையன்னையின்
அழகை மெருகூட்டிடும் நீ
பிரபஞ்சத்தின் பொக்கிஷம்!

விழித்துப் பார்க்கிறது இரவு!

ஆள் நடமாட்டமில்ல தெரு
பைரவனின் குரலடங்கா பொழுதது
சன்னலின் வழி வானத்தை
வெறித்தப்படி அவள்...

இவ்வேளையில்
கதைச் சொல்ல
நிலவு வரும்
ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்

இன்று,
கருவிழி காணுமிடங்கெங்கும்
கருங்கிருட்டு!

விழி சுருக்கி,
கருங்கிருட்டை
துளைக்க முயல்கிறாள்
அவள்...

சலனமின்றி
அவளையே
விழித்துப் பார்க்கிறது
இரவு!

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

Happy New Year!