சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஒரு மழை விட்ட நாளில்...

சன்னலின் ஒரத்தில்
முத்து முத்துக்களாய் வரிசை
நிற்கும் மழைத்துளிகள்...

சாலையோர
நீர் தேக்கங்ளில்
காதித கப்பல்
விடும் மழலைகள்...

தாமரை இதழிலிருந்து
நிலத்தை எட்டி பார்க்கும்
ஒற்றை நீர் துளி...

ஆனந்த குளியலால்
வெப்பமரக்கிளையில் தலைத்தொட்டும்
புறாக்கூட்டம்...

பூமியின் வெப்பத்தைத்
தட்டி எழுப்பும் மழைக்காற்றை
வரவேற்க்கும் முற்றத்து
கற்றாடிகள்...

ஒரு கோப்பை தேநீரை
ருசித்தப்படி
கதவோரத்தில் நான்...

இதோ என் ஆசிகள்!

நல்வாழ்வு உன்னை வந்தடைய
இதோ என் ஆசிகள்!

புகழ் சூட வாழ
கல்வியை வெற்றிடு!

ஆற்றலை அணையின்றி வெளிப்படுத்தி
வெற்றியை உன் வசமாக்கிடு!

துணிவென்பதை துணியாக உடுத்திக்கொள்,
இளமையை இனிமையுடன் நகர்த்திடு!

பொன் - பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை,
நன்மக்களைப் பெற்று மகிழ்ந்திடு!

நெல் சோறாகும் தருணம்,
உன்னை உயர்த்திய உழைப்பை அனுபவித்திடு!

உன் பெருமை தாரணியை சுழ,
என்றும் நல்லுள்ளம் கொண்டு வாழ்ந்திடு!

இன்பங்களில் பெரிது நோயின்மை,
உன் ஆயுளைத் தடையின்றி நீடித்திடு!

வாழ்த்து கூறிட வார்த்தைகள் நூறு வேண்டாம்!
புனித உள்ளம் ஒன்றே போதும்...

நின்மலன் (நான்)...


நீ சிந்தும் புன்னகைக்கே,
சிவந்த பூவாய் பூத்து கிடக்கும் பூமி...

நீ பார்க்கும் பார்வைக்கே,
இலை வெட்டுகளை இணம் கேட்கும் மரங்கள்...

நீ பேசும் பேச்சுகளுக்கே,
ஓடை நீரின் மொழிகளை ஒதுக்கும் ஓடை மீன்கள்...

நீ கொண்ட காதலுக்கே,
வானம் கொண்ட வீண்மினை வம்புகிழுக்கும் நின்மலன் (நான்)...

நீ என்பதால்...



நீ என்பதால்,
பனியின் வரவுக்கு காத்துகிடக்கும் காலைபொழுது, நான்...

நீ என்பதால்,
மழைத்துளியை எட்டி பிடிக்க தவிக்கும் தளிர், நான்...

நீ என்பதால்,
காற்றோடு போட்டி போடும் செம்பந்தியின் வாசம், நான்...

நீ என்பதால்,
குட்டி பொம்மைகளுடன் தூங்கும் களங்கமில்லாத குழந்தை, நான்...

நீ என்பதால்,
புத்தகத்தில் சிறுவன் எழுதிடும் முதல் வடிவம், நான்...

நீ என்பதால்,
பல கோணங்களில் உருகுலையும் உயிர்கொண்ட காதல்மேகம், நான்...

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!