சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

நானும் காற்றும்...

ஒரு குளிர்ந்த பொழுதில்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புல் தரையில்,
உடல் சாய்த்து,உள்ளத்தால் உணர ஆரம்பிக்கிறேன்
காற்றின் வருகையை...

எட்திசையைச் சுற்றி வந்த
குதுகலத்தை அது சொல்லியது...
தன் கண்ட மனிதர்கள்,நகரங்கள்,
கட்டங்கள், காடு மேடு
பற்றிய கதைகளை நானும்
நிறுத்தமால் செவியடக்கினேன்...

நான் நின்றால்,
புவி தன்னிலையை இழந்திடும்
எனக் கூறி புறப்பட்டது காற்று...

கண் திறந்து காற்றை
என்னுளிருந்து சிறைவிடுத்து
நாளைச் சந்திப்பதாகச் சொல்லி நடந்தேன்
வீட்டை நோக்கி....