சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஒரு காதலனும் ஒரு காதலியும்...

கவிதை சொல்வதே அவனின் வேலை..
அவள் விரும்பி கேட்பதால் விடாமல் சொல்கிறேன்...

தினமும் தூங்க விடாமல் பேசுகிறான்...
நான் அழைப்பேன் எனக் காத்திருப்பாளே என அழைக்கிறேன்...

எனக்கு பரிசுகள் கொடுப்பதே அவன் வழக்கம்..
அவளின் கண்கள் சிரிப்பதைக் காண ஆவல்...

இவன் என்னிடம் ஜெயித்ததே இல்லை...
அவள் மனம் வாட விடமனமில்லையே...

கனவுலக மன்னன் இவன்...
கனவுகளின் காட்சியலயமே இவளாக இருக்கும் போது ஏன்செய்வேன் நான்...

(சிணுகல்கள் தொடரும்..)

சில நொடிகளில் வெறுமையாகும் மனது..

பேருந்தில் ஏறி
மனித கூட்டத்தில் அடிப்பட்டு
அலுக்கு துணியாகி வீடு சேரும்
என் அந்தி வேளையாகும்...

அதிகாரியிடம்
செய்யாத தவறுக்கு திட்டு
வாங்கி சிலையாக நிற்கும்
என் அலுவலக நொடிகளும்...

இதுதான் நான்
என்ற நிலையை இழந்து
ஊமையாகும் என்னை நினைத்தும்...

மெளனங்களை தவிர
வார்த்தைகளை தாரை வார்க்க இயலாமல்
கன காற்றை என்னில் திணிக்கும்
சுற்றத்திலும் சுழ்நிலையும் கவனித்தும்...

சில நொடிகளில்
உண்மையாகவே
வெறுமையாகி தான்
போகிறது மனது!

எல்லை

வெறுப்பின் எல்லையில் அன்பு...

அழுகையின் எல்லையில் சிரிப்பு...

உணவின் எல்லையில் மருந்து...

இறப்பின் எல்லையில் பிறப்பு...

கனவுகளின் எல்லையில் நிஜங்கள்...

கடவுளின் எல்லையில் அனைத்தும் அழகு..!

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!