சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

விழித்துப் பார்க்கிறது இரவு!

ஆள் நடமாட்டமில்ல தெரு
பைரவனின் குரலடங்கா பொழுதது
சன்னலின் வழி வானத்தை
வெறித்தப்படி அவள்...

இவ்வேளையில்
கதைச் சொல்ல
நிலவு வரும்
ஆயிரம் வீண்மீன் கூட்டமிருக்கும்

இன்று,
கருவிழி காணுமிடங்கெங்கும்
கருங்கிருட்டு!

விழி சுருக்கி,
கருங்கிருட்டை
துளைக்க முயல்கிறாள்
அவள்...

சலனமின்றி
அவளையே
விழித்துப் பார்க்கிறது
இரவு!

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

13 comments:

thiyaa December 27, 2009 at 6:28 PM  

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

விஜய் December 27, 2009 at 7:36 PM  

அழகாய் இருக்கு கவிதை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சல்லனம் (சலனம்) தவறு என்று நினைக்கிறேன்.

விஜய்

G.VINOTHENE December 28, 2009 at 6:50 AM  

தவறாய் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.:)

G.VINOTHENE December 28, 2009 at 6:51 AM  
This comment has been removed by the author.
"உழவன்" "Uzhavan" December 29, 2009 at 12:10 AM  

மிக அழகான கற்பனை. தலைப்பே ஒரு கவிதைபோல உள்ளது. வாழ்த்துக்கள்
 
//பைரவனின் குரலடங்கா பொழுதது//
 
இதன் பொருள் என்ன?

pls remove word verification

G.VINOTHENE December 29, 2009 at 6:51 AM  

//பைரவனின் குரலடங்கா பொழுதது//

இந்த வரியின் அர்த்தம்:
நாய் குரல் அடங்காமல் @ குரைக்கும் சத்தம் அடங்காத நேரம்.

நன்றிங்க உழவன்.

Thenammai Lakshmanan January 10, 2010 at 6:38 PM  

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

இராவணன் January 11, 2010 at 12:18 AM  

நல்ல கவிதை. மிகவும் பிடித்தது.

ராம்குமார் - அமுதன் January 18, 2010 at 3:04 AM  

நல்லாருக்குங்க உங்க கவிதை...

G.VINOTHENE January 19, 2010 at 6:44 AM  

நன்றிங்க thenammailakshmanan, இராவணன், ராம்குமார் - அமுதன்.=)

Arun Jeevan January 22, 2010 at 8:54 AM  

all the best...

பாலச்சந்தர் February 8, 2010 at 2:15 AM  

nice one
all the best:)

G.VINOTHENE February 9, 2010 at 2:15 AM  

thank u basachandar...=)