சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

அம்மாவுக்காக ஒரு வாழ்த்து!



மகிழ்ச்சியில் நான் குதித்தாடும்
பொழுதெல்லாம் என்னோடு
சேர்ந்து கொள்ளும்
உன் குதுகாலம்!

முகம் வாடிம்
பொழுதெல்லாம்
என்னமா என
கேட்கும்
உன் கரிசனம்!

தவறுகளை
சுட்டி காட்டி
என்னை செம்மைப் படுத்தும்
உன் அறிவுரைகள்!

சோர்ந்து போகும்
நேரங்களில்
ஊன்றுக்கோலாய்
நீ தரும்
ஊற்சாகம்!

சிறுங்காயமனாலும் சரி
பெருங்கீறலனாலும் சரி
பட்டென பதறும்
உன் தாய்மை!

அடிக்கடி
கிண்டல் செய்து
வம்பு இழுக்கும்
என்னை
புன்னகையுடன் பார்க்கும்
உன் அன்பு!

மழையில் நீ நனைந்தாலும்
சிறுத்துளிக்கூட என்மேல்
படாமல் வீடு சேர்க்கும்
உன் பரிவு!

இப்படி
எதைச் சொல்லி,
எதை நான் விட?

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!

நான் வாழும் வரை,
உன்னையும் வாழ வைப்பேன்…
நீடுழி வாழ வாழ்த்துகிறேன், என் அன்புத் தோழியே…

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,அம்மா…!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)

5 comments:

prem prakashdasபிரகாஷ்தாஸ் December 1, 2008 at 11:05 PM  

வணக்கம் ,

good poem.

அ.மு.செய்யது December 2, 2008 at 11:22 PM  

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை "Good Poet" என கேட்ட தாய்.
மிகவும் எளிமையான வரிகள்.கவனிக்கப் பட வேண்டியது.
வாழ்த்துக்கள்.

Anonymous December 3, 2008 at 12:58 AM  

//நான் வாழும் வரை,
உன்னையும் வாழ வைப்பேன்…//

இப்படிச் சொல்லும் மகளைப் பெற்ற அன்புத் தாயாருக்கு நல்வாழ்த்துகள்.

G.VINOTHENE December 7, 2008 at 11:17 PM  

thanks a lot அ.மு.செய்யது and அ. நம்பி...:)

Anonymous January 5, 2009 at 9:48 AM  

thai patri
varthaikalal vivarithai,
anal
un kavithai ptri
kura varthikal illai.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!