சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

மீண்டும் வந்துடுமா அக்காலம்??

முகத்தை மோதி செல்லும்
காற்றின் கீற்றுகளை
மனம் உள்வாங்கிய காலம் அது...

இமை மூடியும்
இருண்ட பூமியின்
மேன்மையை இரசித்த காலம் அது...

கட்டளையின்றி வரிசையில்
மெடுக்காய் நடைப்போடும்
எறும்புகளைச் சீண்டிய காலம் அது...

வெயிலோ மழையோ
எந்நேரமும் சிட்டுக்குருவிகளின் கீச்சுகளைச்
செவியடக்கி கொண்ட காலம் அது...

நீண்டு வளர்ந்த கிளையில்
உஞ்சல் கட்டி காற்றைக் கிழித்தாடும்
குதூக்கலம் நிறைந்த காலம் அது...

இயந்திர காலத்தோடு மனம் ஒட்டாமல்,
ஐம்புலன் களிப்புகளைக் கழித்து
வாழ்ந்திடும் இன்நாளில்,
மீண்டும் வந்திடுமா அக்காலம்??

2 comments:

Sakthi January 22, 2010 at 10:14 PM  

இயந்திர காலத்தோடு மனம் ஒட்டாமல் thaan naanum vaalukiren...

அண்ணாமலை..!! March 29, 2010 at 7:40 AM  

எனக்குக் கூட அப்படியே பின்னால
போகனும்னு ஆசதான்..!
எங்க..?? நடக்குமா..??

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!