சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஈழத்துக்காக...

போரில் வெற்றி வாகை
சூடிக் கொண்டேயிருக்கிறேன்
என எதை வைத்து
எக்காளித்துக் கொண்டிருக்கிறாய்?

நீ வெற்றது
வெறும்
பிணக்குவியல்!
ஆத்மாக்களின் கதறல்கள்!

இனி
வெல்ல போவதும்
உயிர்களின் சாபங்கள்
மட்டும் தான்!

3 comments:

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) November 30, 2008 at 4:31 AM  

சுதந்திர சுவாசம்....
இதற்காக நாம் இழந்தவைதான் எத்தனை,எததனை....

எமது சரித்திரத்தை அழிக்க - யாழ்
நூலகத்தை எறித்தான்!

எமது பெண்ணினத்தை ஒடுக்க - அவர்தம்
கற்பை கலைத்தான்!!

எமது எதிர்காலத்தை அழிக்க - எமது
குழந்தைகளை கொன்றொழித்தான்!!

சமாதானத்தை ஒழிக்க - தமிழ்செல்வனை அழித்தான்!!

தமிழீழத்தை இல்லாமல் ஆக்க -
எண்ணிலடங்கா தமிழனை அழித்தான்!!

எதிரி எதை அழித்தினும் - எங்கள்
சுதந்திர தாகத்தை அழிக்க இயலாது!!

ஈழ மண்ணில் எம் தமிழன் புதைக்கப்படவில்லை; - விதைக்கப்படுகிறான்!!

சிந்திய உதிரம்;
உதிர்ந்த மாவீரர்கள்;
கிளர்த்தெழுந்த தேசியம்;
எழுதிய கவிதை;

- இவை எதுவும் வீணாகப்போவதில்லை!!

உலக தமிழரின் தாகம்,தமிழீழ தாயகம்.........

G.VINOTHENE November 30, 2008 at 4:56 PM  

//சுதந்திர சுவாசம்....
இதற்காக நாம் இழந்தவைதான் எத்தனை,எததனை....//

இழந்தவையெல்லாம் மீட்டும் காலம்
வெகு தூரமில்லை!

Muniappan Pakkangal December 1, 2008 at 9:25 AM  

My opinion is what SATEES has expressed.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!