சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

தமிழ்

உன்னை தெரியாது என
உடல் சிலிர்ப்பவனையும்,

உன்னை பற்றி சொல்லி தரவில்லையென
பிறரைக் கைக்காட்டுபவனையும்,

உன்னை தெரிந்தும்,
தெரியாது போல் பாசாங்கு செய்பவனையும்,

"கண்டு உனக்கு கோபமே வராதா"
என நான் கேட்க,
துளி சிரிப்புடன் பதில் சொல்கிறாய்...

அவன் விழுந்தால்
"அம்மா" என
என்னைச் சொல்லி அழுகிறான்...

அவன் பதறினால்
"அய்யோ" என
என்னைச் சொல்லி கூவுகிறான்...

அவன் பெயரை அழைப்பவர்கள் கூட
என்னைச் சொல்லி தான் அழைக்கிறார்கள்...

இப்படியிருக்க
நான் வேறு
என்ன செய்ய வேண்டும்
இவர்களை?

"வாழ்க நீ"
என குதுகலமாய் நான்!

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!