சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஒரு வண்ணத்துப்பூச்சியின் கனவு!

படபடவென இறக்கைகளை
அடித்துக்கொண்டு
அந்த
சிட்டுக்குருவியைப் போல்
வானத்தில் பறக்க வேண்டும்!

வானவில்லில் மிதக்கும்
ஏழு வர்ணங்களையும் குழப்பி
என் சின்னங்சிறு
இறகில் பூசி
பெருமிதம் கொள்ள வேண்டும்!

நான் பறக்கையில்
என் வண்ணம் சிந்திய
செடிக்கொடிகள் சினுங்குவதை
ரசிக்க வேண்டும்!

தேன் உரிஞ்சும் போது
கோபப்படும் பூக்களை,
"கோபங்கொண்டாலும் நீயழகு"
என கிண்டல் செய்ய வேண்டும்!

என்னைக் கண்டு
பிடிக்க வரும்
குட்டிக்குழந்தையின்
தோளில் அமர்ந்து,
அதன்
சிரிப்பைக் காண வேண்டும்!

எல்லையில்லா
ஆனந்ததிடனும்,
நெருடலில்லா
வாழ்வுடனும்
இறைவனடி சேர வேண்டும்!

2 comments:

மு.வேலன் November 15, 2008 at 7:13 AM  

நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்!

G.VINOTHENE November 17, 2008 at 10:38 PM  

நன்றி, மு.வேலன்.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!