கரைத்தொடும் அலையைக் கண்டு வரலாம்
என கிளம்புகையில்
உன் சிரிப்பலைக் கண்டு
ஸ்தமித்து நிற்கிறேன்…
என்னிதயதையும் சேர்த்து
அதனுள் தொலைத்து விட்டு !
மூழ்கடிக்கும் வலிமை
அந்த கடலுக்கு
இருக்குமானால்,
என்னிதயத்தை
மூழ்கடிக்கும் வலிமை
கரைத்தொடும் அலையைக் கண்டு வரலாம்
என கிளம்புகையில்
உன் சிரிப்பலைக் கண்டு
ஸ்தமித்து நிற்கிறேன்…
என்னிதயதையும் சேர்த்து
அதனுள் தொலைத்து விட்டு !
Labels: காதல் கவிதை
போரில் வெற்றி வாகை
சூடிக் கொண்டேயிருக்கிறேன்
என எதை வைத்து
எக்காளித்துக் கொண்டிருக்கிறாய்?
நீ வெற்றது
வெறும்
பிணக்குவியல்!
ஆத்மாக்களின் கதறல்கள்!
இனி
வெல்ல போவதும்
உயிர்களின் சாபங்கள்
மட்டும் தான்!
Labels: பொது
நீ போகும் பாதையில் உதிர்ந்து கிடக்கும் பூவாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் கிழே கிடப்பதால் உன் செவிகளுக்கு எட்டவில்லை போலும்...
உன் முகத்தை தொட்டு செல்லும் காற்றில் கலந்து
என் காதலை சொல்கிறேன்,
உன்னை மோதி செல்வதால் நீயுணர வில்லை போலும்...
நீ விளையாடும் மழைத்துளிகளில் ஒன்றாயிருந்து
என் காதலை சொல்கிறேன்,
நான் உருண்டோடி விடுவதால் நீ கவனிக்க வில்லை போலும்...
இப்படி எத்தனை அனுமானங்களை நானே உருவாகிக் கொண்டு
இந்த காதலை ஏமாற்றுவது?
Labels: காதல் கவிதை
"ரொம்ப துணிச்சலான பெண்"யென
சுற்றித்தாரிடமெல்லாம் நல்ல பெயர் எனக்கு...
வெகு நாளாய் உன்னிடம்
காதல் சொல்ல சொல்லி
மன்றாடுகிறது மனது..
நாளை சொல்கிறேன் என
நாட்களை தள்ளுகிறேன் நான்..
இப்பொழுதெல்லாம்
ஏமாற்ற கனலில் மனம்...
எப்படி சொல்லி புரிய வைப்பது?
நீ எதிரே வருகையில்
ஒட்டு மொத்த துணிச்சலும்
என் பின்னால் அல்லவா
ஒளிந்து கொள்கிறது....
Labels: காதல் கவிதை
வெகு நேரமாய்
பேருந்தின் வெளியே
உன் பார்வை...
சூரியனின் ஒளிக்கதிர்கள்
சன்னலை ஊருடுவி
உன்னை தாக்க
கண் சுருக்கி,
உடல் சிலிர்கின்றாய் நீ...
சேர்ந்து சிலிர்கிறது
பேருந்தும்,
உன்னைக் கண்டு...
Labels: ரசித்தவை
உன்னை தெரியாது என
உடல் சிலிர்ப்பவனையும்,
உன்னை பற்றி சொல்லி தரவில்லையென
பிறரைக் கைக்காட்டுபவனையும்,
உன்னை தெரிந்தும்,
தெரியாது போல் பாசாங்கு செய்பவனையும்,
"கண்டு உனக்கு கோபமே வராதா"
என நான் கேட்க,
துளி சிரிப்புடன் பதில் சொல்கிறாய்...
அவன் விழுந்தால்
"அம்மா" என
என்னைச் சொல்லி அழுகிறான்...
அவன் பதறினால்
"அய்யோ" என
என்னைச் சொல்லி கூவுகிறான்...
அவன் பெயரை அழைப்பவர்கள் கூட
என்னைச் சொல்லி தான் அழைக்கிறார்கள்...
இப்படியிருக்க
நான் வேறு
என்ன செய்ய வேண்டும்
இவர்களை?
"வாழ்க நீ"
என குதுகலமாய் நான்!
Labels: தமிழ்
சமையல் அறையில்,
கருங்புகைக்குள்
அடிக்கடி காணமல்
போபவள்...
மழைத்துளிகளிடையே
தோய்த்த துணிகளை
காப்பாற்ற ஓடுபவள்...
அழும் சிறு குழந்தையை
மார்பில் அணைத்து
சிரிக்க வைப்பவள்..
வேலைக்கு போனாலும்
வீட்டு வேலைகளை
விட்டு வைக்காமல்
கவனிப்பவள்..
கணவன் முகத்தில்
தெரியும் சிறு சுருக்கங்களையும்
பெரிதாகி விடாமல்
சமாளிக்க தெரிந்தவள்...
எப்பொழுதும் மறக்காமல்
தன் நலன் காணமல்
இறைவனிடம் பிராத்தனை
செய்பவள்..
Labels: பெண்
படபடவென இறக்கைகளை
அடித்துக்கொண்டு
அந்த
சிட்டுக்குருவியைப் போல்
வானத்தில் பறக்க வேண்டும்!
வானவில்லில் மிதக்கும்
ஏழு வர்ணங்களையும் குழப்பி
என் சின்னங்சிறு
இறகில் பூசி
பெருமிதம் கொள்ள வேண்டும்!
நான் பறக்கையில்
என் வண்ணம் சிந்திய
செடிக்கொடிகள் சினுங்குவதை
ரசிக்க வேண்டும்!
தேன் உரிஞ்சும் போது
கோபப்படும் பூக்களை,
"கோபங்கொண்டாலும் நீயழகு"
என கிண்டல் செய்ய வேண்டும்!
என்னைக் கண்டு
பிடிக்க வரும்
குட்டிக்குழந்தையின்
தோளில் அமர்ந்து,
அதன்
சிரிப்பைக் காண வேண்டும்!
எல்லையில்லா
ஆனந்ததிடனும்,
நெருடலில்லா
வாழ்வுடனும்
இறைவனடி சேர வேண்டும்!
Labels: ரசித்தவை
மழை நின்றதும்,
மரக்கிளையில்
தங்கிடும்
மழைத்துளிகள்
போல்,
உன்னை கண்டதும்
பேசயிருந்த வார்த்தைகள்
எல்லாம்
தங்கி விடுகின்றன
என்னுள்...
Labels: காதல் கவிதை
உன் வீட்டு ஜன்னலோரத்தில்
ஏன் இவ்வளவு பூக்கள்?
நீ ஒருத்தி மட்டும்
வந்து நின்றாலே போதாதா...?
Labels: ரசித்தவை
என் இதய வீனையே...
என்னுள் நீ வாசிக்கும் ராகங்கள்
உயிர் என் உடலில் உள்ள வரை
என்னுள் வசிக்கும்...
Labels: காதல் கவிதை
Copyright 2009 - சிதறிய கவித்துளிகள்...