புத்தகம்
கைகளில் எடுக்க
நிதானிக்கும்
அவன்,
சாமியிடம்
வேண்டுகிறான்,
"கடவுளே, நான் நல்ல படிக்கணும்.."
*
புத்தகப்பையை கூட
கழற்றாமல்
குப்பைத்தொட்டியின்
அருகே அவன்…
தூரத்தில் அவன் அப்பா…
"போத்தல், டின் இருந்தா
கிளறி எடுத்துட்டு வா…"
"இதை வித்தா தான் உனக்கு
புக்கு வாங்க முடியும்"
*
பள்ளியில்
பிரதேக வகுப்பு…
படிக்க போகணும் என்ற ஆசையில்
பள்ளிக்கு அழைத்து போக சொல்லி
வேண்டுகிறான் அச்சிறுவன்,
பெற்றவர் சொல்கிறார்,
"மோட்டார் எண்ணெய் செலவுக்கு
உன் வாத்தியாரை பத்து ரிங்கிட்
தர சொல்..
சரியென்றால் கூட்டிப் போரேன்!"
*
ஆரம்ப பள்ளியில்,
படிப்பில் கெட்டியென
பெயர் எடுத்த மாணவி…
இடைநிலைப்பள்ளியிலும்
தன் பெயரை நிலைப்பெறுதல் வேண்டும்
என ஆவா கொண்ட மாணவி…
படிக்க ஏங்கும் இவளின் கெஞ்சலுக்குக்
கிடைக்கும் பதில்,
"படிச்சது போதும்."
"இதுக்கு மேல படிக்க வைக்க காசு இல்ல"
விடாமல் வேண்டுகிறாள்,
கடவுளிடம்,
"சாமி, அப்பாக்குக் காசு கொடு."
"நான் படிக்கணும்."
கல்விக்காக…
Posted by
G.VINOTHENE
Thursday, March 12, 2009
Labels: பொது
0 comments:
Post a Comment