சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஆனந்தம்...

குனிந்து தூக்கியவனின்
கன்னத்தை
தன் பிஞ்சு கைகளால்
அடித்து
"வலிக்குதா அப்பா"
என கேட்டு
எச்சல் பட முத்தமிடுகிறாள்
என் குழந்தை...

மெல்ல கண்கள்
மூடி அனுபவிக்கிறேன்...

இதை விட ஆனந்தம்
உலகில் வேறு எதிலாவது உண்டா..!?

1 comments:

ரகசிய சிநேகிதி October 30, 2008 at 12:07 AM  

அழகான கவிதை. வாழ்த்துகள்

(எதிலாவது) இப்படி தானே இருக்க வேண்டும்...? சரியா..

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!