(1)
வயல்களிடையே
தட்டானை பிடிக்க
இருவராய் ஓடிய போது
கொஞ்சம் தவழ்ந்தது
நம் நட்பு...
(2)
மின்மினி பூச்சியை
பிடிக்க வெகு நேரம்
அமர்ந்து என் தோளில்
தாலை சாய்த்து
நீ தூங்கும் போது
கொஞ்சம் நடை பயின்றது
நம் நட்பு...
(3)
பள்ளி விட்டு வரும் போது
உன் புத்தகத்தை நானும்
என் புத்தகத்தை நீயும்
சுமந்து வரும் வழியெல்லாம்
மொட்டாய் மலர்கின்றது
நம் நட்பு...
(4)
ஒரு மழைக்காலத்தில்
எனக்கு வந்த காய்ச்சல்
பக்கத்தில் அமர்ந்திருந்த உனக்கும் வந்து
இருநாள் கழித்து பார்க்கும் போது
நல்லாயிருக்கியானு இருவரும் ஓரே சமயம்
சேர்ந்து கேட்டு சிரித்த போது
பூவாய் மலர்ந்து மணம் வீசுகிறது
நம் நட்பு...
(5)
மேல் படிப்புக்காக
திசைக்கொருவராய் பிரிந்து
பலவிதமான பிரச்சனைகளிடையும்
குறுஞ்செய்தி மூலம் எப்பொழுதாவது
பேசிக்கொள்ளும் நம்மை
தூரமாகி விடாமல்
இறுக்கமாய் தொடர்கின்றது
நம் நட்பு...
தொடரும்...
நம் நட்பு...
Posted by
G.VINOTHENE
Wednesday, October 29, 2008
Labels: நட்பு
1 comments:
நட்பு என்றுமே அழகுதான். அற்புதம்தான். உங்கள் கவிதையும் நாளுக்கு நாள் மெருகேருகிறது.வாழ்த்துகள்.
சில எழுத்துப்பிழைகள்:
//மின்மினி பூச்சை//
பூச்சியை
//மலர்க்கின்றது//
மலர்கின்றது
//திசைக்கோருவராய்//
திசைக்கொருவராய்
பிழைகளை சுட்டிக்காட்டுவது என் இயல்பு.தமிழில் பிழைக்கு இடமளிக்க கூடாது என்று நினைப்பவன். சுட்டிக்காட்டுவது பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடலாம்.
Post a Comment