ஒரு குளிர்ந்த பொழுதில்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புல் தரையில்,
உடல் சாய்த்து,உள்ளத்தால் உணர ஆரம்பிக்கிறேன்
காற்றின் வருகையை...
எட்திசையைச் சுற்றி வந்த
குதுகலத்தை அது சொல்லியது...
தன் கண்ட மனிதர்கள்,நகரங்கள்,
கட்டங்கள், காடு மேடு
பற்றிய கதைகளை நானும்
நிறுத்தமால் செவியடக்கினேன்...
நான் நின்றால்,
புவி தன்னிலையை இழந்திடும்
எனக் கூறி புறப்பட்டது காற்று...
கண் திறந்து காற்றை
என்னுளிருந்து சிறைவிடுத்து
நாளைச் சந்திப்பதாகச் சொல்லி நடந்தேன்
வீட்டை நோக்கி....
நானும் காற்றும்...
Labels: கனவு
அவனின் நிழல்...
வானம் தன்னிறத்தை இழந்து
மஞ்சளை பூச தொடங்க..
அடிவானத்தை பார்த்தப்படி
அமர்ந்திருக்கிறாள் அவள்...
தனியே சிரித்து,பேசி
கொண்டிருக்கும் அவளைப்
பார்த்தப்படியே கூடு திரும்புகின்றன
பறவைகள்...
வானம் தன்னிறத்தை இழந்து
கருளைக் கவ்விக் கொண்ட பின்னே
மெல்ல எழுந்து நடக்கிறாள்,
அவளுடன் சேர்ந்து நடக்கிறது
அவனின் நிழல்...
Labels: தனிமை
இமைக்குள் உறங்கி போகும் உன்னைப்பற்றி...
அந்நாளில் நினைவுகளை
ஒவ்வொன்றாய் என்னிதய
கதவுகளைத் திறந்து வைக்க...
ஒரு காலை பொழுதில்
மரத்தடிக்கு அழைத்துச் சென்று
மரக்கிளையில் தங்கிடும்
பனித்துளிகளைத் துளி துளியாய்
என் மீது துளிர செய்து...
ஒரு மாலை வேளையில்
மஞ்சள் நிற வானம்
தன்னைத் திரட்டிக்கொண்டு
நீல கடலில் புதைக்கும்
அழகை என்னுள் புத்துளிர்க்க செய்து...
நான் கேட்டு இல்லையென்று
சொல்லாத குணம் உனது
பொய் கோபம் கொண்டாலும்
முத்தமிட்டு அணைக்கும் உள்ளம் உனது
இன்று ஏனோ,
இமை மூடி அனுபவித்து
எழுத முயல்கிறேன்;
இமைக்குள் உறங்கி போகும் உன்னைப்பற்றி...
Labels: காதல் கவிதை
தீண்ட மாட்டாதா?
மஞ்சள் நிற பூக்கள்
தரையெங்கும் விழ...
உன் பார்வை அவற்றின்
மேலே பதிய...
உனக்காக பூக்களோடு
காத்திருக்கும் என்னை...
உன் விழி ஒருகணம்
தீண்ட மாட்டாதா?
Labels: காதல் கவிதை
மீண்டும் வந்துடுமா அக்காலம்??
முகத்தை மோதி செல்லும்
காற்றின் கீற்றுகளை
மனம் உள்வாங்கிய காலம் அது...
இமை மூடியும்
இருண்ட பூமியின்
மேன்மையை இரசித்த காலம் அது...
கட்டளையின்றி வரிசையில்
மெடுக்காய் நடைப்போடும்
எறும்புகளைச் சீண்டிய காலம் அது...
வெயிலோ மழையோ
எந்நேரமும் சிட்டுக்குருவிகளின் கீச்சுகளைச்
செவியடக்கி கொண்ட காலம் அது...
நீண்டு வளர்ந்த கிளையில்
உஞ்சல் கட்டி காற்றைக் கிழித்தாடும்
குதூக்கலம் நிறைந்த காலம் அது...
இயந்திர காலத்தோடு மனம் ஒட்டாமல்,
ஐம்புலன் களிப்புகளைக் கழித்து
வாழ்ந்திடும் இன்நாளில்,
மீண்டும் வந்திடுமா அக்காலம்??
Labels: பொது
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
தரமிக்க எருது,
அமோக விளைச்சலைத் தருவது போல்,
எழுச்சி மிக்க மனிதர்கள்,
தூர நோக்கு சிந்தனைக்
கொண்ட சமுதாயத்தை உருவாக்குகிறார்கள்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...